செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர்… 3 லட்சம் நிவாரண தொகை… முதல்வர் அறிவிப்பு…!! Revathy Anish21 July 2024084 views நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன்(18) நேற்று மதியம் 1.30 மணி அளவில் பாலவயல் அருகே உள்ள பொன்னானி ஆற்றல் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து குணசேகரன் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்