செய்திகள் தேசிய செய்திகள் பெண்களுக்கு நீங்கள் ஊக்கசக்தி… ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்…!! Revathy Anish25 July 20240107 views இந்திய நாட்டின் ஜனாதிபதியான திரௌபதி முர்மு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவருக்கு அரசியல் கட்சியினர், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உங்கள் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், சவாலான சூழலில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் உதாரணமாகவும், ஊக்க சக்தியாகவும் உள்ளீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.