கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் பெருந்தலைவருக்கு 1000 அடி சிலை நிறுவப்படுமா…? குமரி எம்.பி. கோரிக்கை…!! Revathy Anish25 July 20240105 views கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கன்னியாகுமரியில் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜருக்கு 1000 அடியில் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும், அதன் அருகே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சிலைக்கு அருகே வைக்கப்படும் அருங்காட்சியகத்தில் காமராஜர் பற்றிய குறிப்புகள் அனைத்தும் வைக்கப்பட வேண்டும். இதனால் காமராஜர் நாட்டிற்கு செய்த தியாகம், சேவை ஆகியவற்றை இந்த உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் அமையும் என தெரிவித்தார். மேலும் குமரியில் சுற்றுலா வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.