சுற்றித்திரிந்த காட்டு யானைகள்… வாகன ஓட்டிகளின் செயல்… வனத்துறையினர் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு சுற்றி திரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் வாகனங்களை நிறுத்தி தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர்.

இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பின்பு யானை கூட்டம் அங்கிருந்து கலைந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் யானைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஒட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகனத்திலிருந்து இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!