செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் அடுத்த மேயர் யார்…? கோவை, நெல்லை மேயர் ராஜினாமா… மூத்த தலைவர்களுடன் ஆலோசனை…!! Revathy Anish4 July 20240100 views திருநெல்வேலி மாவட்ட மேயராக திமுகவை சேர்ந்த பி.எம். சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொள்ளத்தல் மாநகராட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கோவை மேயர் கல்பனா ராஜினாமா கடித்தை வழங்கிய நிலையில், அதை தொடர்ந்து நெல்லை மேயர் பி.எம்.சரவணனும் மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும் அடுத்த மேயர் பதவி யாருக்கு வழங்குவது குறித்து தி.மு.க மூத்த தலைவர்களுடன் பலரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் 2 மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.