செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் அதுக்குள்ள யாரு வந்துருப்பா…? குடும்பத்தாருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… …!! Revathy Anish21 July 20240129 views திருநெல்வேலி மாவட்டம் அம்பை கோவில்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாரிமுத்து வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து காணப்பட்டது. மேலும் வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதி உடனடியாக அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.