செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் வெளுத்து வாங்கும் மழை… மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு… பொதுமக்கள் அவதி…!! Revathy Anish26 July 20240207 views கடந்த இரண்டு வாரமாக நீலகிரி பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கூடலூர், மஞ்சூர், பந்தலூர், ஊட்டி, குன்னூர் என பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி கேத்தி பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து அருகில் இருந்த காவல்நிலையம் மீது விழுந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் காவலர்கள் சேதமின்றி உயிர் தப்பினர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஊட்டி-குன்னூர் சாலை, இத்தலார் சாலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் பாதுகாப்பு கருதி ஊட்டி, குந்தா தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதிலும் குளிர்ந்த வானிலை இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.