செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் பிரச்சாரத்தில் விதி மீறல்… தி.மு.க. பா.ம.க. நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு…!! Revathy Anish8 July 2024088 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இறுதி பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ளது. மேலும் வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் கட்சிக்கொடி கம்பங்களை நட்டது, விளம்பர பதாகை வைத்தது, கொடி தோரணங்களை கட்டியது என பல விதிகளை மீறியுள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி, தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன், நிர்வாகிகள் தேவேந்திரன், குணசேகரன், தி.மு.க. கிளை செயலாளர் ராகுல், முருகன், தி.மு.க. நிர்வாகி புஷ்பா, பா.ம.க கிளை செயலாளர்கள் மதியழகன், விஜயகுமார், பா.ம.க. நிர்வாகி கணேசன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சுந்தரவளவன் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.