செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் நேருக்கு நேர் மோதிய வேன்-பேருந்து… ஒருவர் பலி… திருவண்ணாமலையில் பரபரப்பு…!! Revathy Anish25 August 2024082 views திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேன் ஒன்று நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.