செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் கணக்கில் வராத பணம்… மாட்டிக்கொண்ட பேரூராட்சி செயலாளர்… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!! Revathy Anish17 July 20240103 views தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி பீட்டர் பால் துறை தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக புகார்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின் போது கணக்கில் வராமல் பேரூராட்சி செயலாளர் மகேஸ்வரனிடம் 1,09,000 ரூபாயும், அலுவலக ஊழியர்களிடம் 25,500 ரூபாயும் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.