செய்திகள் மாநில செய்திகள் சென்னை வந்த ஐக்கிய அரபு அமீரக மந்திரி… புதிய முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை…!! Revathy Anish25 July 20240102 views சென்னையில் நேற்று சர்வதேச வர்த்தக கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி கலந்து கொண்டுள்ளார். அப்போது தமிழகத் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி பாலு கலந்து கொண்டு புதிய கூட்டு முயற்சிகள் மூலம் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு பெறுவது குறித்து கலந்து ஆலோசித்தனர். அப்போது புதிய தொழில் முதலீடு குறித்தும் மேம்பட்ட தொழில் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. இதனையடுத்து மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி இன்று தலைமையகம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து புதிய முதலீடுகள் குறித்து பேசப்பட்டது.