செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் அத்துமீறி நுழைந்த நபர்… சிக்கிய போலி அடையாள அட்டை… வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு…!! Revathy Anish13 July 2024092 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முடிந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு நபர் போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு நுழைய முயன்றார். அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர் யார்? எதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய முயன்றார் என விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.