ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் சாலையில் நடந்து சென்ற பெண்… போதை ஆசாமி செய்த காரியம்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! Revathy Anish24 July 20240103 views ஈரோடு மாவட்டம் ரயில் நகர் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. சம்பவத்தன்று இரவு 20 வயது பெண் ஒருவர் அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணின் கையைப் பிடித்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக அலறியதால் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதனை அடுத்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ரயில்வே நுழைவு பாலம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், பலரும் இங்கு வந்து மது அருந்திவிட்டு செல்வதால் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தனர். எனவே அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.