செய்திகள் மாநில செய்திகள் தலைமறைவாக இருந்த அஞ்சலை… மடக்கி பிடித்த போலீசார்… தீவிர விசாரணை…!! Revathy Anish20 July 2024087 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சிக்கினார். அதில் ஏற்கனவே வழக்கறிஞர்களான மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் கைதாகி உள்ளனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷின் மனைவியும், பாஜக பெண் பிரமுகருமான அஞ்சலை தலைமறைவாக இருந்தார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தற்போது தலைமறைவாக இருந்த அஞ்சலையை காவல்துறையினர் மடக்கி கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அஞ்சலையை பாஜக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.