கரூர் செய்திகள் மாவட்ட செய்திகள் 25,00,000 ரூபாயை பறிகொடுத்த நபர்… தம்பதி மீது புகார்… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish6 July 2024086 views கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் நிவேதன் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அறிமுகமான பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அரசு எர்த் ஒர்க் காண்ட்ராக்ட் வாங்கி கொடுப்பதாக கூறி 25 லட்சம் கேட்டுள்ளார். இதனை நம்பிய நிவேதனும் அவர் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளார். இந்நிலையில் நிவேதன் பணம் கொடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் மணிகண்டன் எந்த காண்ட்ராக்ட்டும் வாங்கி தரவில்லை. இதுகுறித்து அவர் கரூர் மாவட்ட சூப்பிரண்டு போலீசிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேதனிடம் மோசடி செய்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி லட்சுமி கமலாதேவி குறித்து விசாரித்து வருகின்றனர்.