செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!! Revathy Anish13 July 2024075 views விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் வருகை தந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தற்போது மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.