செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் மனைவியை வீட்டிற்கு அழைக்க சென்ற கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish23 July 20240126 views சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜெயரூபிணி(20) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உதயகுமார் தினமும் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபடுவதால் கடந்த சில மாதங்களாக ஜெயரூபிணி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று உதயகுமார் மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று ஜெயரூபிணியிடம் தன்னுடன் வாழவருமாறு அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு வெடித்தது. இதனால் மனமுடைந்த ஜெயரூபிணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.