செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்… வழியில் நேர்த்த விபரீதம்… 2 பேர் பலி…!! Revathy Anish24 July 20240121 views திருப்பூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் ரஞ்சனி பிரியா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ரஞ்சனி பிரியா, அவரது தாய் பேபி, உறவினர்கள் சிவகுமார் மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது கார் காங்கேயம் கருக்கம்பாளையம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சனி பிரியா மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது பேபி மற்றும் சிவகுமார் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.