செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் விளையாடி கொண்டிருந்த குழந்தை… தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் சோகம்… கதறி அழுத தாய்…!! Revathy Anish6 July 2024077 views சென்னை ரெட்டேரி பகுதியில் கணவருடன் வசித்து வந்த துர்கா(26) என்ற பெண் 2-வதாக கர்பமாக இருந்த நிலையில், தனது 1 1/2 வயது குழந்தை கிருத்திகாவை அழைத்து கொண்டு துராப்பள்ளத்தில் இருக்கும் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று கிருத்திகா வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிருத்திகாவை தேடி கொண்டிருந்தபோது வீட்டின் அருகே இருக்கும் 2 அடி தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தார். அதை பார்த்து பதறிய துர்கா உடனடியாக கிருத்திகாவை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் கிருத்திகா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு துர்கா கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆரம்பக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.