கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் திடீரென தீப்பிடித்த பேருந்து… உயிர் தப்பிய பயணிகள்… டிரைவருக்கு குவியும் பாராட்டு…!! Revathy Anish22 July 20240132 views கோவை மாவட்டம் பீளமேடு அருகே நேற்று ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலையிலிருந்து பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் தாஸ் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினார். இதனையடுத்து பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே இறங்கினர். இதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர். மேலும் டிரைவரின் துரித செயலினால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.