செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் வருவாய் குறைவால் அவதி… பழனி தேவஸ்தானம் மீது புகார்… கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்…!! Revathy Anish5 July 2024088 views முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி அப்பகுதியில் வாகனங்கள் வராத வகையில் தடுப்புகள் பழனி தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு சொந்தமான கடைகளும் அகற்றப்பட்டதாலும், வாகனங்கள் தடுக்கப்பட்டதாலும் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதாக நகர்மன்ற கூட்டத்தில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானத்தை கண்டித்து நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தேவஸ்தான அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை அகற்றுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். எனவே தேவஸ்தானம் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த போராட்டத்தில் துணை தலைவர் கந்தசாமி, நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.