கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் காலி குடங்களுடன் திடீர் போராட்டம்… ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பரபரப்பு…!! Revathy Anish20 July 20240100 views கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை எம்.அகரம் புதுக்காலனி மற்றும் பழைய காலனி பகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் அகரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.