இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!! Revathy Anish9 July 2024077 views ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.