செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர் ஆதரவின்றி நிற்கும் மகன்… தாய் 2-வது திருமணம்… காவல் நிலையத்தில் சிறுவன் அளித்த மனு…!! Revathy Anish17 July 20240100 views வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த 15 வயது சிறுவன் தாயை மீட்டு தர வேண்டும் என மிகவும் வருத்தத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் தான்-தாய் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் நான் சில காலம் பாட்டி வீட்டில் வசித்தேன். இதனையடுத்து என் தந்தை பல முறை சேர்ந்து வாழலாம் என்று என் அம்மாவை அழைத்தபோதும் அவர் வரவில்லை. தற்போது எனது அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை நான் தட்டி கேட்டதால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். என் பாட்டி வீட்டிலும் என்னை சேர்த்து கொள்ளவில்லை. இப்போது நானும் எனது தந்தையும் ஆதரவின்றி நிற்கிறோம். எனவே எனது தாயை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் இருந்துள்ளது.