செய்திகள் தேனி மாவட்ட செய்திகள் திருட வந்த இடத்தில் தூக்கம்… கடைக்காரரிடம் சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish22 July 20240132 views தேனி மாவட்டம் பங்களா மேடு டி.பி மேற்கு தெரு பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன்(60) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் ராஜேந்திரன் வழக்கம் போல மளிகை கடையில் திறக்க சென்றார். அப்போது கடைக்கு உள்ளே வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வாலிபரை பிடித்து தேனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த விஸ்வநாதன்(25) என்பதும், ராஜேந்திரன் கடையின் மேற்கூறையை பிரித்து திருட வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து விஸ்வநாதன் மதுபோதையில் திருட வந்ததால் இரவு கடையிலேயே படுத்து உறங்கி விட்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.