செய்திகள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் போலி மதுபானங்கள் விற்பனையா…? 3 பேர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish25 August 20240180 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் சையத் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போலியாக மதுபான ஆலை நடத்தி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த மதுவிலக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இப்ராஹிம் பதிக்க வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதை விற்பனை செய்த இப்ராஹிம் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.