செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் கோவிலுக்கு செல்ல மறுத்ததால் திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish22 July 20240107 views விழுப்புரம் மாவட்டம் சாலமேடு என்.ஜி.ஓ காலனியில் மங்கள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மங்கள்ராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கார்த்திகேயனை செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் மங்கள்ராஜ் திட்டியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.