கரூர் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் 100 கோடி ரூபாய் நில மோசடி… சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish17 July 2024087 views கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நில மோசடி செய்துவிட்டு எம் ஆர் விஜயபாஸ்கர் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். மேலும் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் அளித்த மனுவும் தள்ளுபடி ஆனது. தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கரை கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 5 மணி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.