செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் 16 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த வேண்டுதல்… திருச்செந்தூர் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசுமாலை அன்பளிப்பு…!! Revathy Anish9 July 2024088 views மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க காசு மாலை வழங்குவதாக வேண்டியிருந்தார். இந்நிலையில் நேற்று அதனை நிறைவேற்ற தனது குடும்பத்துடன் போஸ் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். இதனையடுத்து சுமார் 978 கிராம் எடையுள்ள 70 லட்சம் மதிப்பிலான தங்க காசு மாலையை கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கியுள்ளார். அப்போது அவருடன் உள்துறை கண்காணிப்பாளர் அறுபுத்தமணி, பேஷ்கார் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.