செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் போலீசாரின் அதிரடி வேட்டை… துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது… ரகசிய இடத்தில் விசாரணை…!! Revathy Anish17 July 20240111 views சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்ப முயன்ற ரவுடி சேதுபதியை போலீசார் வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்