கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் ரவுடி செல்வதை சுட்டு பிடித்த போலீஸ்… மருத்துவமனையில் அனுமதி… குமரியில் பரபரப்பு…!! Revathy Anish19 August 20240134 views கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கரும்பாட்டூர் பகுதியில் ரவுடி செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 6 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நிலையில் மொத்தம் இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் சுசீந்திரம் பைபாஸ் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர் காவல் உதவி ஆய்வாளரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பு முயன்றார். இதை பார்த்த காவல்துறையினர் ரவுடி செல்வத்தின் காலில் சுட்டு பிடித்தனர். தற்போது அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.