செய்திகள் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் மாணவனை கண்டித்த பெற்றோர்… வழியிலே நடந்த பரிதாபம்… திருத்தணி அருகே சோகம்…!! Revathy Anish16 July 20240108 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாத்திரஞ்செயபுரம் பகுதியில் அக்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இயற்பியல் படித்து வந்தார். இந்நிலையில் அக்மல் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அகமல் பூச்சி மருந்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அக்மலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்மல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.