கிருஷ்ணகிரி செய்திகள் மாவட்ட செய்திகள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… கல்லூரி மாணவரின் விபரீத செயல்… போலீசார் விசாரணை…!! Revathy Anish12 July 2024075 views திருவண்ணாமலை மாவட்டம் பென்னாத்தூர் கல்லாவி சுரத்தூர் பகுதியில் பகுதியில் சிவாஜி(19) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் ஓசூரில் செம்படைத்தெருவில் பெற்றோருடன் வசித்து அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சிவாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சிவாஜி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் மகனை உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.