செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!! Revathy Anish2 July 2024093 views திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் வசித்து வந்த தன்ராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு இதற்கு முன்னதாக இந்திய தண்டனை சட்டம் 174-ன் கீழ் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருச்சி மாவட்டம் முழுவதிலும் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களின் கீழ் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவத்துறையினர் தெரிவித்தனர்.