செய்திகள் தேசிய செய்திகள் நீட் வினாத்தாள் முறைகேடு… ஒருவர் அதிரடி கைது… சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை…!! Revathy Anish4 July 20240108 views நீட் முறைகேடு விவகாரத்தில் 6 வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் பல்வேறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் வசிக்கும் அமன்சிங் என்பவரை வினாத்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிய விட்டதாக ஹசாரிபாக் பகுதியில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.