செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் மருத்துவமனைக்கு வந்த மர்ம கடிதம்… வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 20240135 views சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பா.ம.க கட்சியை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த மருத்துவமனையில் வெடுக்குண்டு வைத்திருப்பதாகவும், இதே போல் பல மருத்துவமனைகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற பெரும்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மருத்துவமனை முழுவதிலும் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அந்த கடிதத்தில் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரை பகுதியை சேர்ந்த மேகநாதன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை வைத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.