செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் முதுமலை யானைகள் காப்பகம்… தொடர்ந்து 3 நாட்கள் மூடல்… கனமழையினால்நடவடிக்கை…!! Revathy Anish20 July 20240150 views நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என இயற்கை உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகத்தில் மூன்று நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.