செய்திகள் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்று திருமணம்… பெற்றோர்கள் எதிர்ப்பு… அடுத்து நடந்தது என்ன…? Revathy Anish11 July 20240107 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் தங்கத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமையா பேகம் என்ற கல்லூரி மாணவியும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதலில் உறுதியாக இருந்த இருவரும் கடந்த 5 ஆம் தேதி பெற்றோர்க்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் இருந்து விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே சுமையா பேகத்தின் பெற்றோர் மகளை காணவில்லை என ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையறிந்த தங்கத்தமிழன் மற்றும் சுமையா பேகம் காஷ்மீரில் இருந்து உடனடியாக சென்னை வந்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் சம்மந்தப்பட்ட இரு வீட்டாரின் பெற்றோரிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தி சுமையா பேகமை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.