செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 1 கிலோமீட்டர் வரை நீண்ட வரிசை… திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்…!! Revathy Anish20 July 2024093 views ஆடி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக என பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையியல் பக்தர்கள் அம்மன் கோபுரம், ராஜகோபுரம் என 2 வரிசையாக 1 கிலோ மீட்டருக்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர். மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகமானதால் அதிகாலையில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.