செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் உயிருடன் இருந்த ஆமைகள்… ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்… மலேசியாவிற்கு கடத்த முயற்சி…!! Revathy Anish16 July 20240117 views சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருப்பதாக கூறினார். அந்த பேட்டி லேசாக அசைவதை பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது பெட்டியில் 160 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்துள்ளது. அதனை உடனடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியின் மலேசியா பயணத்தை ரத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நட்சத்திர ஆமைகள் ஆந்திராவில் 50 முதல் 100 ரூபாய் வரை வாங்கி, அதனை மலேசியாவிற்கு சென்று 5,000 வரை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.