செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் கொலைக்கு பின்னணி உள்ளதா…? 11 பேரிடம் தீவிர விசாரணை…போலீசார் தகவல்…!! Revathy Anish12 July 2024083 views சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் இந்த கொலையின் பின்னணியில் யாரேனும் உள்ளனரா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி நீதிமன்றத்தின் உத்தரவின் படி கைதான 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையை நேரில் பார்த்தவர்களை அழைத்து அவர்களிடம் கொலையாளிகளை அடையாளம் கட்ட அணிவகுப்பும் நடத்தப்படவுள்ளது.