செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு… களைகட்டும் பழனி… பலத்த போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish24 August 20240111 views திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை காலை 9 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இதை அடுத்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் என சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப் படுகிறது. எனவே அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.