உலக செய்திகள் செய்திகள் “இந்தோனேசியா-ரஷ்யா” மீண்டும் விமானசேவை தொடங்குமா…? நிபந்தனைகளை விதிக்கும் ரஷ்யா…!! Revathy Anish28 June 2024097 views இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யாவிற்கு அதிக பங்கு உள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இப்போது இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமானத்தை இயக்குவதற்கு இந்தோனேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் ரஷ்யா இதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் விரைவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானம் இயக்கப்படும் என இந்தோனேசியா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாக யூ நோ தெரிவித்துள்ளார்.