செய்திகள் தேசிய செய்திகள் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!! Revathy Anish2 July 20240107 views மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார். இந்நிலையில் பட்டாசு மீது டம்ளர் வைத்து வெடித்த போது டம்ளர் வெடித்து சிதறி அதன் தூள்கள் சிறுவனின் வயிற்றில் குத்தியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் தீபக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோஹல்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.