உலக செய்திகள் செய்திகள் அமெரிக்காவில் பலியான இந்திய மாணவன்… குளிக்க சென்றபோது விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024074 views அமெரிக்காவில் உள்ள டிரினே பல்கலைக்கழகத்தில் இந்தியா தெலுங்கானாவை சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பவர் படித்து வருகிறார். இவர் கடந்த 7-ஆம் தேதி நியூயார்க் அல்பேனி பகுதியில் உள்ள பார்பர்வில் அருவிக்கு குளிக்க சென்றார். அப்போது இவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் சாய் சூர்யா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நியூயார்க் இந்திய தூதரகம் மூலம் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.