நள்ளிரவில் தீப்பிடிக்கும் குடிசைகள்… கடலூர் அருகே பரபரப்பு… பொதுமக்கள் அச்சம்…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கல்குணம் கிராமத்தில் சில நாட்களான அப்பகுதியில் குடிசை வீடுகள் வைக்கோல்போர் ஆகியவை நள்ளிரவில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிகிறது. இதுவரை கிராமத்தில் 5 குடிசை வீடுகள், 3வைக்கோல் போர் ஆகியவை தீப்பிடித்து இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் யாரேனும் நள்ளிரவில் குடிசைகளுக்கு தீ வைக்கிறார்களா என்று கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தள்ளுவண்டி கடை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்தது தீயணைப்புத் துறையினர் இருந்து கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். ஆனாலும் தள்ளுவண்டி கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் அதிகாரி ராஜாராம் தீ விபத்திற்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!