செய்திகள் மாநில செய்திகள் இனிமேல் இது கேப்டன் ஆலயம்… தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்…!! Revathy Anish25 August 20240129 views மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதிலும் தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சி சார்பில் தொண்டர்கள் அன்னதானம், மாணவர்களுக்கு இலவச பேனா, நோட்டு, இனிப்புகள் ஆகியவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜய்காந்த் நினைவு இடத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகன்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தினர். இதை அடுத்து விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த பிரேமலதா தேமுதிக தலைமை அலுவலகம் இனிமேல் “கேப்டன் ஆலயம்” என அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.