செய்திகள் மாநில செய்திகள் சூறைக்காற்றுடன் கனமழை…. ஆகாயத்திலேயே வட்டமிட்ட விமானங்கள்…. பயணிகள் அவதி….!! Inza Dev18 June 2024085 views சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை 2:30 மணி அளவில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது, இதில் மீனம்பாக்கம் பகுதியும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரை இறங்க வேண்டிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சுமார் ஏழு விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்தது. துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர் விமானம் மட்டும் வேறு வழியின்றி பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா, துபாய், டெல்லி ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக தான் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். “அதிகாரிகளின் அலட்சியம்” ஆக்கிரமிப்பு விட்டுவிட்டு வீட்டை இடித்து தள்ளிய அவலம்….!!