கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் பட்டதாரி பெண் கர்ப்பம்… கிராம மக்கள் சீர் வரிசை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!! Revathy Anish11 July 20240106 views கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் 12-ஆம் வகுப்பு முடித்து அப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வந்துள்ளார். சங்கீதாவின் பெற்றோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் அவர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சங்கீதா திருமண வயதை அடைந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சங்கீதாவிற்கு கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து சங்கீதா தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் இளநிலை பட்டம் பயின்று வந்துள்ளார். தற்போது சங்கீதா கர்ப்பமாக இருப்பதை அறிந்த காட்டுக்கூடலூர் மக்கள் தாய் வீட்டு சார்பில் முன்னின்று அவருக்கு வளைகாப்பு நடத்தி, 5 வகையான சாதங்கள், பழங்கள், சீர் வரிசைகள் என அனைத்தையும் வெகு விமர்சையாக கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.