செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் மூட்டி வலிக்கு போடும் பட்டையில் இருந்த தங்கம்… சோதனையில் சிக்கிய நபர்… 1.16 கோடிதங்கம் பறிமுதல்…!! Revathy Anish5 July 2024077 views வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருவதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தின் மூலம் திருச்சி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு நபர் மூட்டு வலிக்காக தான் காலில் அணிந்திருந்த பட்டையை சோதனை செய்த பொது அதில் 1,605 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.16 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.